Sunday, July 11, 2010
அர்த்தமுள்ள இந்துமதம் சொல்லும்! உறவு!!!
அர்த்தமுள்ள இந்துமதம் சொல்லும் உறவு!!!
மனிதன், சமுக வாழ்வை மேற்கொண்டுவிட்ட ஒரு மிருகம் என்றார் ஓர் ஆங்கில அறிஞர். காட்டு மிராண்டிகளாக சிதறிக் கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஓர் இடத்தில ஒன்று சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்த இடம் ஊர் என்று சொல்லப்பட்டது. பின்பு அதுவே நகரம் ஆனது. தனி மனிதர்கள் 'சமுக' மாகி விட்டார்கள்.
தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காக சில சம்ப்ரதாயங்கள் உருவாகின. அந்த சம்ப்ரதயன்களுள் சில புனிதமாகக் கருதப்பட்டுத் தருமங்கள்லாகின. பின்னர் அதுவே உறவுகள் ஆகின. சம்ப்ரதாயங்களுக்காக தோன்றிய உறவுகள் மரபுகள்ஆகி, அந்த மரபுகள் எழுதப்படாத சட்டங்களாகிவிட்டன.
இந்த உரவுகல்லுக்குள்ளும், பொதுவாகச் சமூகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்ப்ரதயங்கள் ஆகி, மரபுகளாகி, அவையும் சட்டங்களாகிவிட்டன.
இந்த சட்டங்களே நமது சமுகத்தின் மரியாதைகள்; இந்த வேலிகள் நம்மை காவல் செய்கின்றன.இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும், நிம்மதிக்கும்மாக உருவாக்கப்படவை.
ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?
இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.
"பிறப்பால் தொடரும் உறவுகள் அல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை" என்பது இந்துமதத் தத்துவம். பிறப்பின் உறவுகளே பேதளிக்கின்றன. சமுக மரபுகள் இவற்றை ஒழுக்ககேடாக கருதவில்லை. முதலில் சமூகங்களுக்கு, ' இவையும் ஒழுக்கக் கேடுகள்' என்று போதித்தது இந்து மதம்.
அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலைய்லிருந்து விலகியதும், வேலை பார்த்த இடத்தை மறந்து விடுகிறோம்.ஹோட்டல் அறைஇல் தங்குவது போல் சில உறவுகள். சொந்த வீட்டில் தங்குவது போல் சில உறவுகள்
"ஆயிரம் வாசல் இதயம்!! யாரோ வருகிறார்கள். யாரோ போகிறார்கள்! வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்; வறண்டால் ஒதுக்குகிறார்கள்; செத்தபின் ஒப்புக்காக அழுகிறார்கள்."இரண்டு ஆத்மாக்கள் ஒன்றாகி, ஓர் ஆத்மா தாக்கப்படும் போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாக துடிக்குமானால், அந்த உறவே புனிதமான உறவு.
இந்தப் புனிதப் பயணம் இன்னும்மொரு சரித்திரம்!! உறவுகள் மீண்டும் தொடரும்...........
இப்படிக்கு இவன்!!
Subscribe to:
Post Comments (Atom)
great one Meach...!!! thought provoking..!! :)
ReplyDeletecheers,
Ragz!
Arumaiya karuthhu...... Neriya ezuthungo.....
ReplyDelete