Tuesday, July 13, 2010
நாமதேவர் - மகாராஜ்
விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல விட்டல .... புண்டலீக வரதே........ ஹரி விட்டலே...விட்டல விட்டல
பண்டரிபுரத்து பாண்டுரங்கனின் பரம பக்தர்கள். தினமும் விடிந்ததும் உணவு சமைத்து, ஆலயத்திற்கு எடுத்து சென்று, நைவேத்யம் செய்துவிட்டு, அதனை பிரசாதமாக சாப்பிடுவது வழக்கம்!! ஒருநாள்.. கணவன் வெளியே எங்கேயோ சென்றுவிட, நேரமாகிவிட்டதே என்று பதைபதைத்த மனைவி, தன்னுடைய ஐந்து வயது மகனிடம் உணவை கொடுத்து. இறைவனுக்கு நைவேத்யம் செய்து வரச் சொல்லிக் கோயிலுக்கு அனுப்பி வைத்தாள். அதன்படி, பாண்டுரங்கனின் முன் உணவை வைத்தான். இந்த உணவை கடவுள் சாப்பிடப் போகிறார் என்று சந்தோஷப்பட்டான். அனால் பாண்டுரெங்கன் வரவில்லை. 'நான் கொடுத்தல் சாப்பிட மாட்டாயா?' எனக் கதறினான். ம்ம்ம்ம்..... வரவே இல்லை அந்தப் பாண்டுரெங்கன். சுவாமியின் காலைப் பிடித்து கதறி அழுதான்... அப்போதும் பாண்டுரெங்கன் வரவே இல்லை.
'என் அப்பா கொடுத்தால் சாப்பிடுவாய்; நான் தந்தால் சாப்பிட மாட்டாயா?' என்று கேட்டுக்கொண்டே, சந்நிதி மேடையில் உள்ள கல்லில் தலையை முட்டிக் கொண்டான். அப்போது, பண்டரிபுரத்து பாண்டுரங்கனின் ஆடையும் ஆபரணங்களும் மெள்ள மெள்ள அசைந்தன. தலை நிமிர்த்திப் பார்த்த அந்த சிறுவன், மகிழ்ந்து போனான்.... அங்கே அழகாக அந்த கருணாமுர்த்தி, பாண்டுரெங்கன் நின்று இருந்தான். சிறுவன், தான் கொண்டு வந்த உணவை எடுத்து ஊட்ட, அதனை கனிவுடன் ஏற்றான் பாண்டுரெங்கன். அது மட்டுமா???!!!!!! சிறுவனுக்கும் தான் கையால் உன்னவுட்டி மகிழ்ந்தான், மகிழ்வித்தான்!!!! ஆஹா ஆஹா என்ன ஒரு பக்தி, பகவானுக்குத் தான் என்ன ஒரு கருணை..
உற்சாகமும் குதியலுமாக வெறும் பாத்திரத்துடன் விடு திரும்பிய மகனிடம், " உணவு எங்கே?" என்று கேட்டனர் பெற்றோர். அதற்க்கு அந்த சிறுவன் "பாண்டுரெங்கனும் நானும் சாபிட்டோம்" என்று சிரித்தபடி பதில் சொன்னான் பிள்ளை. இதை அவனின் பெற்றோர் நம்பவில்லை. மறுநாள்......................
அந்த சிறுவன் உணவை எடுத்துக்கொண்டு பாண்டுரங்கனிடம் செல்ல, அவனை பின்தொடர்ந்தனர் பெற்றோர். பிள்ளை கொஞ்சலும் கெஞ்சலுமாக உணவருந்த அழைத்ததையடுத்து , பாண்டுரெங்கன் அங்கே காட்சி தர...... அதிர்ந்து நின்றனர். அந்த தம்பதி!! இறைவன்னுக்கு அவனும், அவனுக்கு அந்த இறைவனும் உணவுட்ட, அதை கண்டு, மனம் பூரிதனர்....
அந்த சிறுவன் வேறு யாரும் இல்லை.... கி பி வருடம். மகாராஷ்டிரா மாநிலம், நரஸ்வமணி என்னும் கிராமத்தில், தையல் தொழில் செய்து வந்த தாமாஷேச்டியும், அவரின் மனைவி குணாபாய்க்கும் பிறந்த தெய்வ மகன் நாமா. பின்னர் அனைவராலும் நாமதேவர் புகழ்ப் பெற்றான்.
Abhang of Namadev:
yei ho vittahle, Bhaktajan vatsale
karunaa kallole, pandurange...
karunaa kallole, pandurange...pandurange.....
yei ho vittahle, Bhaktajan vatsale..
Sajal jalad ghan, pitambar pareedhaan
Sajal jalad ghan, pitambar pareedhaan
yei uddharane, Keshiraje.........
Bhaktajan vatsale....Bhaktajan vatsale.
nama mhane tu vishvachi janani
Kshirabdhee nivasinee jagadambe.
Bhaktajan vatsale....Bhaktajan vatsale.
pandurenga pandurenga pandurenga.......
Subscribe to:
Post Comments (Atom)
nice one..keep writing..!!!
ReplyDelete